Home
நேர்காணல்

நேர்காணல்

மணிப்புலவர் மருதூர் ஏ மஜீத்
முன்னால் தேசிய கல்விப் பணிப்பாளர், முன்னால் வட-கிழக்கு கலாசாரப் பணிப்பாளர், பிரபல எழுத்தாளர் மற்றும் கவிஞர் அவர்களுடனான நேர்காணல்

(23.05.2017 தினகரன் பத்திரிகையில் வெளியிடப்படது)

1. முஸ்தஃபா சர்வதேசப் பல்கலைக்கழகம் பற்றிய தங்களின் அறிமுகம் மற்றும் அனுபவம் பற்றி…

இப்பல்கலைக்கழகத்தின் இலங்கைக்கிளை, கடந்த நான்கு ஆண்டுகளாக ஆரம்பிக்கப்பட்டு, இயங்கிக்கொண்டு வருகின்ற போதிலும், அது குறித்து சுமார் பன்னிரண்டு வருடங்களுக்கு முன்னரே அறிந்திருந்தேன். இப்பல்கலைக்கழக இலங்கைக்கிளை ஆரம்பித்ததிலிருந்து அவர்களுடைய கல்வி, கலாசார நிகழ்வுகளில் பங்குகொண்டு வருகிறேன். அத்தோடு, இலங்கைக்கிளையில் நடாத்தப்படுகின்ற இஸ்லாமியக் கற்கைத்துறையின் விசேட இளங்கலைப் பட்டப்படிப்பில் தமிழ் இலக்கியம் மற்றும் இஸ்லாமிய தமிழ் இலக்கியம் போன்ற பாடங்களுக்கான விரிவுரையாளராகவும் இருக்கிறேன்.

2. இப்பல்கலைக்கழகத்தின் விசேட அம்சங்கள் குறித்து…

இப்பல்கலைக்கழகம், ஈரான் இஸ்லாமியக் குடியரசின் அறிவியலாராய்ச்சி மற்றும் தொழிநுட்ப அமைச்சு, சர்வதேச பல்கலைக் கழகங்களுக்கான ஒன்றியம், ஆசியா மற்றும் பசுபிக் பல்கலைக்கழகங்களின் சங்கம், பல்கலைக்கழகத் தலைவர்களுக்கான சர்வதேச ஒன்றியம் மற்றும் இஸ்லாமியப் பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பு முதலிய சர்வதேச நிறுவனங்களில் அங்கத்துவம் வகிப்பதனூடாக சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றுள்ளதுடன், இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகும். இவ்வகையில் அரச மற்றும் தனியார் துறைகளில் வேலைவாய்ப்புகளைப் பெற்றுக்கொள்ள முடியும். இஸ்லாமியக் கற்கைகள், சட்டத்துறை மற்றும் அரசறிவியல் போன்ற விசேட இளங்கலைக்கான கற்கைபீடங்கள் அனுபவம்வாய்ந்த, திறமையுள்ள அதிகாரிகளால் வழிநடாத்தப்படுகின்றன.
இதில் உள்வாரியாக மட்டுமே கற்கைகள் இடம்பெறுவதால், மாணவர்கள் அதிகம் கற்றுக்கொள்கிறார்கள். இது, இலாபநோக்கமற்ற முறையில் உள்வாரிப் பட்டப்படிப்பை வழங்குகின்ற வெளிநாட்டுக் கல்வி நிறுவனம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இஸ்லாமியப் பல்கலைக்கழகம் என்றவகையில் பண்பாடு மற்றும் கலாசார ரீதியிலான ஒழுக்கக்கோவைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது. அதேநேரம், பல்லின மாணவர்களும், தங்களது சமய, கலாசார ரீதியிலான சுதந்திரத்தோடு கற்றுவருகின்றனர்.
கொழும்பிற்கு வெளியிலிருந்து வருகின்ற மாணவ, மாணவிகளுக்கு தனித்தனியான, பாதுகாப்பான தங்குமிட வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. முற்றத்து மல்லிகை மணப்பதில்லை என்பதுபோல, இத்தனை சிறப்புவாய்ந்த இப்பல்கலைக்கழகக்கிளை இலங்கையில் முழுவதும் இன்னும் சரியாக அறிமுகப்படுத்தப்படவில்லை என்பது கவலைக்குரியது. அதேபோன்று, இலாபநோக்கமற்ற முறையில் இயங்கிவருகின்ற இப்பல்கலைக்கழகம் இலங்கையருக்கு ஒரு வரப்பிரசாதமாகும்.

3.இப்பல்கலைக்கழகத்தின் மூலம் மாணவர்கள் அடைந்துகொள்பவை என்ன…

இதில் இருக்கின்ற அனைத்துத் துறைகளும், கற்கைகளும் ஆங்கில மொழி மூலம் நடைபெறுவதால் தமிழ் மற்றும் சிங்கள மொழி மாணவர்கள் தங்களது ஆங்கில மொழித்திறனைப் பெற்றுக்கொள்கிறார்கள். ஒவ்வொரு மாணவர்களும் தாம் தெரிவு செய்கின்ற துறைகளில் உள்வாரியாகக் கற்பதினால், குறித்த பாடங்களில் ஆழமான அறிவைப் பெற்றுக்கொள்கிறார்கள். மேலும், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட இப்பல்கலைக்கழகம் வழங்கக்கூடிய சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்ற சான்றிதழினால் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் மேல் பட்டப்படிப்புகளையும், தொழில் வாய்ப்புகளையும் பெற்றுக்கொள்ள முடியும்.
இலங்கையின் அரசாங்கப் பாடத்திட்டங்களுக்கு அமைவாக வடிவமைக்கப்பட்ட ‘இஸ்லாமியக் கற்கைகள்’ துறையில் விசேட இளங்கலைப் பட்டப்படிப்பை மேற்கொள்ளக் கூடிய மாணவர்களுக்கு, கலை இலக்கிய ரீதியில் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. நானும் பல்வேறு பயிலரங்குகளை நடாத்தியதனூடாக, அவர்களின் திறமைகளை கண்ணுற்றுள்ளேன்.

4. பட்டப்படிப்பை மேற்கொள்ள விரும்புவோருக்கு, இப்பல்கலைக்கழகம் பற்றி தாங்கள் வழங்குகின்ற ஆலோசனைகள்….

தற்போது, பட்டப்படிப்பு என்பது பெரும் சவாலானதாகும். உள்வாரிப்பட்டப் படிப்பை மேற்கொண்டு, தங்களை வளர்த்துக்கொள்ள விரும்புகின்றவர்கள், தாங்கள் விரும்பிய துறைகள் இப்பல்கலைக்கழகத்தில் இருப்பின் அதனைத் தேர்வுசெய்து கொள்ளலாம். அதேபோன்று, இலாபநோக்கமற்ற இப்பல்கலைக்கழகம், கஸ்டப்பிரதேச மாணவர்களுக்கும், பட்டப்படிப்புக்கு பணவசதி தடையாக உள்ள மாணவர்களுக்கும் மிகச்சிறந்த தெரிவாக இருக்கும்.